Saturday 24 August 2013

நார்திகரர்களை நோக்கி எழுப்பிய கேள்வி

மனிதர்கள்களுக்கு நீங்கள் உதவ நினைத்தால், மனிதநேயம் காக்க நினைத்தால், கடவுளை மறந்திடுங்கள். "கடவுளை மற மனிதனை நினை" என்று சொல்லி, நீங்கள் கடவுளை நினைத்து கொண்டிருந்தால் மனிதர்களுக்கு சேவை செய்ய இயலாது. எனவே கடவுளை மறந்திடுங்கள் என்பன போன நச்சு கருத்களை மக்கள் மத்தியில் ஆண்டான்டு காலமாக பரப்பி வருகிறீர்களே, இது மத்தமத்த மதங்களுக்கும், சித்தாத்தகளுக்கும் பொருந்துமே தவிர இஸ்லாத்திற்கு ஒரு காலும் பொருந்தாது. இங்கு கடவுளை நினைத்தால் தான் மனிதர்களை நன்றாக நடத்த முடியும்.

"கடவுளை மற மனிதனை நினை" என்று சொல்லி நீங்கள் மனிதர்களுக்கு செய்த சேவையை விட, நீங்கள் மனிதர்களுக்கு ஆற்றிய அறப்பணியை விட, நாங்கள் கடவுளை நினைத்து கொண்டு, கடவுளை வணங்கி கொண்டு மனிதர்களுக்கு சேவை ஆற்றுவதில் நாங்கள் மேலாக நிற்கிறோமே.

எந்த அளவுக்கு? மனித நேயத்திலயே உயிர் காப்பது "இரத்த தானம்" அதில் தொடர்ந்து இந்த இஸ்லாமிய சமூதாயம் முதலிடம், அதிலும் குறிப்பாக நம்முடைய ஜமாஅத் முதல் விருது பெருகிறது என்று சொன்னால், கடவுளை மறந்ததால் விருது பெற்றார்களா? கடவுளை நினைத்தால் விருது பெற்றார்களா?

"கடவுளை மற மனிதனை நினை" என்று ஐம்பது அறுபது வருடங்களாக சொல்லி கொண்டு வருகிறீர்களே, நீங்கள் கடவுளை மறந்து மனிதனை நினைத்து இந்த மனிதகுளத்திற்கு செய்த சேவை என்ன? இந்த மனிதகுளத்திற்கு செய்த நன்மை என்ன?

ஆனால் அனைவரையும் விட இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மூலமாக அல்லாஹ் மனிதர்களுக்கு சேவையை, உதவியை செய்ய வைக்கிறான் என்றால் அதற்கு காரணம் நாங்கள் கொண்ட கொள்கை அல்லவா?

1 comment: