Tuesday 24 September 2013

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்!  

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்! 

மோடிதான் அடுத்த பிரதமர்; இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது. மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக உள்ளது.  கருத்துக்கணிப்பில் மோடிதான் முன்னணியில் உள்ளார் என்று கூறி கருத்து திணிப்பை இப்போதிருந்தே மீடியாக்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மோடி என்ற நரமாமிசப் பிரியரை பிரதமராக்காமல் ஓயமாட்டோம் என்று மீடியாக்கள் உறுதிமொழி ஏற்றதுபோல அவைகளின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.  அரியானாவில் மோடி உரையாற்றக்கூடிய நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள தந்தி டிவி நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய அளவிற்கு மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதி வருகின்றனர் நமது மீடியாக்கள்.  திருச்சியில் பா.ஜ.க. சார்பாக நடைபெறவுள்ள மாநாட்டில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளார்கள் என்று இவர்கள் காட்டும் பில்டப்புகள் எல்லை கடந்து செல்கின்றன.  மோடிக்கு மிரட்டல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை; அவர் குண்டு துளைக்காத மேடையில் நின்று உரையாற்றப்போகின்றார். அவருக்கு ரஜினி ஆதரவு தரப்போகின்றார்; இதற்கென தனியாக பாடல் ரிங்டோன்களை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தனியாக பிரச்சார சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன; சாமானியர்கள்; தொழிலாளர்கள்; தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களுடைய ஆதரவும் மோடிக்குத்தான் என்று இவர்கள் மோடியை புகழ்ந்து தள்ளி எழுதுவதைக்காணும் போது தமிழகத்தையும் குஜராத்தாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் போலும் என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.  குஜராத் போன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றுவதுதான் இவர்களுக்கு விருப்பமாம். ஆம்! குஜராத்தில் எப்படி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை மோடி கருவறுத்து இரத்த ஆறு ஓட்டினாரோ அதுபோல இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடவிடவேண்டும் என காவிக்கரை படிந்த மீடியாக்கள் எதிர்பார்க்கின்றனர் போலும்.  மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள திருச்சி மாநாட்டிற்கு வருகை தருவதற்காக ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆனலைன் வாயிலாக தங்களது பெயர்களை 10ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர் என்று கதையளந்தது தான் இதில் உச்சகட்ட ஜால்ராவாக இருந்தது.  1லட்சம பேர் அளவிற்கு ஆனலைன் வாயிலாக இவர்களது மாநாட்டிற்கு வருகை தர பதிவு செய்யக்கூடிய அளவிற்கா இவர்களது தொண்டர்கள் கணினியுடனும், இணையதளத்துடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கா அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் அப்டேட்டாக இவர்கள் வைத்துள்ளார்கள் என்று ஆச்சர்யப்பட்டுப்போய் அவர்களது இணையதளத்தை விசிட் செய்தோம்.  பிஜேபியின் தமிழக இணையதளத்தில் நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் அவர்களது அன்றாட நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்தால் காரித்துப்பி விடுவீர்கள். ஆம்! கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மின்வெட்டைக் கண்டித்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய செய்திதான் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பாக அப்டேட் செய்யப்பட்டதுதான் இவர்களது லேட்டஸ்ட் செய்தியாம்.  இந்த லட்சணத்தில்தான் இவர்களது இணையதள அப்டேட் இருக்கின்றது என்றால் இத்தகைய சூரப்புலிகள்தான் ஆன்லைன் வாயிலாக ஒரு லட்சம் பேர்களை பதிவு செய்துள்ளார்களாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.  இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைத்தான் ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூறி, பொய் செய்திகளைப் புனைந்து மிகப்பெரிய சாதனை மன்னர்களைப் போல காட்ட முயல்கின்றனர். இதிலிருந்த இந்த மீடியாக்களின் கோர புத்தி தெளிவாகின்றது.  மோடியை கதாநாயகனாக சித்தரிக்கும் இதே வேலையில் அந்த நரபலி நாயகன் செய்த மிருக வெறிச்செயல்களை, இரத்தம் குடித்த கொடூரத்தை வசதியாக மறைத்து இந்த காட்டுமிராண்டியை மனித நேய விரும்பியைப்போல காட்டி மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையையும் இந்த மீடியாக்கள் செய்து வருகின்றனர்.  இவற்றையெல்லாம் காணும்போது இதற்கு முன்பு வாஜ்பேய் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஒளிர்கின்றது என்று சொல்லி காட்டப்பட்ட பில்டப்புகள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.  இந்தியா ஒளிர்கின்றது; நாடு முழுவதும் வாஜ்பேயி அலை வீசுகின்றது. வாஜ்பேயிதான் அடுத்த பிரதமர். இவரைப்போல ஒரு சாது கிடையாது; இவர்தான் உலக அளவில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார் என்றெல்லாம் சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். கடைசியில் வாஜ்பேயி மண்ணைக்கவ்வினார். பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அதுபோலத்தான் இவர்கள் மோடிக்கு கொடுக்கும் பில்டப்புகளும் இறைவனின் அருளால் புஷ்வாணமாகிப்போகவுள்ளது என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/modiku_atharvaka_makudi_oothum_jalrakal/Copyright © www.onlinepj.com

No comments:

Post a Comment